
திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயர்ச்சி திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
விடாமுயர்ச்சி படத்தின் டிரைலர் காட்சிகள், வைத்த கண் வாங்காமல் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. கார்கள் மோதி கொள்ளும் காட்சியுடன் துவங்கும் டிரைலர், அஜித் – திரிஷா ஜோடியின் காதல் காட்சிகளுடன் நகர்கிறது. இருவரிடையேயான உணர்வுபூர்வமான காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. அதேபோல், அர்ஜுன் – ரெஜினா ஜோடியும் டிரைலரில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கும் இடையேயான மோதல் காட்சிகள் படத்தின் கதையை சுவாரசியமாக்குகின்றன.
விடாமுயர்ச்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருந்தனர். விடாமுயற்சி படத்தில் ரெஜினா காசாண்ட்ரா, அர்ஜுன் சர்கா, ஆர்வா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ஒம் பிரகாஷ் கவனித்துள்ளார். முதலில் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விடாமுயர்ச்சி படம், பின்னர் 10 நாட்கள் தள்ளிப்போடப்பட்டது. தற்போது டிரைலருடன் படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயர்ச்சி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள விடாமுயர்ச்சி படத்தின் நீளம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.